சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை இருக்கும், குறிப்பாக 14 மாவட்டங்களில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கு உள்ள அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்தநிலையில் அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டின் கடலூர மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையை பொறுத்த வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழை / இடியுடன் கூடிய மழை சில பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை இருக்கும்.