வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வரும் தலைவர்களின் பயணச் செலவுகளில் இருந்து விலக்கு பெற அவர்களது பெயர்பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு கட்சிகளுக்கு அறிவுரை...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரட்சரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வரும் தலைவர்களின் பயணச் செலவுகளில் இருந்து விலக்கு பெற அவர்களது பெயர்பட்டியலை சமர்பிக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 


இது தொடர்பாக செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த சலுகையைப் பெற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயரையும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயரையும் 7 நாட்களுக்குள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அல்லது ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான அறிவிக்கை 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


பட்டியலில் உள்ள தலைவர்களின் பயணச் செலவுகளில் இருந்து மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் இதர செலவுகள் அனைத்தும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரச்சாரம் செய்தால் அதில் விலக்கு கோர இயலாது என்றும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.