தமிழகத்தில் வரும் ஜூன் 8-ஆம் நாள் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், B.Ed தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று வெளியான அறிவிப்பின் படி வரும் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவிருந்த B.Ed தேர்வு, வரும் ஜூன் 13-ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல்தாள் தேர்வு ஜூன் 8-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதே தேதியில் B.Ed தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. TET தேர்வை B.Ed இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களும் எழுதுவதற்கு தகுதி உடையவர்கள்.


இந்நிலையில், B.Ed இரண்டாம் ஆண்டு மாணவர்களின் மொழித்தாள் தேர்வானது, TET தேர்வு நடைபெறும் தேதியில் நடைபெற இருந்ததால், B.Ed தேர்வு எழுதுவதா அல்லது TET தேர்வை எழுதுவதா என B.Ed மாணவர்கள் குழப்பம் அடையும் நிலை ஏற்பட்டது. 


இதன் காரணமாக தேர்வின் தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை முன் வைத்திருந்தனர். இந்நிலையில், ஜூன் 13-ஆம் தேதிக்கு B.Ed  தேர்வை மாற்றி உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டார்.