காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி 8- மாத ஆண் குழந்தையுடன் ரயிலுக்கு காத்திருந்ததாகவும், அவர் அடுத்த பிளாட்பார்ம்'க்கு குழந்தையுடன்  கடக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.  அபோது அந்த பெண்மணி கால் தடுக்கி ரயில்வே தண்டவாளம் மீது விழுந்து தலையில் அடிபட்டு மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.  அந்த சமயம் எர்ணாகுளத்திலிருந்து பிளக்ஸ்பூர் செல்லும் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தும் போது ரயிலின் அடியில் தாயும் குழந்தையும் சிக்கிக்கொண்டார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | உயிருடன் இருப்பதற்கு சான்று கேட்ட வங்கி..ஆவணங்களைத் தேடி அலையும் முதியவர்!


இதனையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து வந்து குழந்தையும் தாயும்  உயிருடன் மீட்டனர். குழந்தைக்கு காயங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் அக்குழந்தையின் தாயிக்கு மட்டும் அடிபட்டதால் அவர் மயங்கிய நிலையில் உள்ளார்.  இருவரையும் மீட்ட போலீஸார் ஆம்புலன்ஸ் மூலமாக  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், எர்ணாகுளம் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிற்கும் பட்சத்தில் இவர் கால் தடுக்கி விழுந்தார் என தெரிகிறது. 


ரயில் தண்டவாளம் இடையில் விழுந்ததால் குழந்தையும் தாயும் உயிருடன் இருக்கிறார்கள். அடிபட்ட பெண் மயக்க நிலையில் உள்ளதால் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என இதுவரையில் தெரியவில்லை. அவர் மயக்கம் தெளிந்த பிறகே தெரியவரும் அவரிடத்தில் எந்த அடையாள அட்டைகள் எதுவும் இல்லை என கூறினர்.  தாயையும் 8- மாத  ஆண் குழந்தை காப்பாற்றிய இச்சம்பவம் ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.


ALSO READ | கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி; இருவர் பலி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR