தமிழகத்தின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, திமுக தலைமையிலான தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் இருக்கும் அவர், மாநில அரசின் கொள்கை நிலைப்பாடான புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு ரத்து ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். இவரின் இத்தகைய செயல்பாட்டால் கடும் அதிருப்தியில் இருக்கும் தமிழக அரசு, மாநில அரசின் செயல்பாட்டை குறைக்கும் வகையில் செயல்படும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற முழக்கத்துக்கு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சனாதனம், வெடிகுண்டு தாக்குதலை நியாயப்படுத்தலாமா? - ஆளுநருக்கு திமுக கடும் கண்டனம்!


இரண்டு நாட்களுக்கு முன்பு ஐயப்பா சேவா சங்க நிகழ்ச்சியில் கூட திமுகவின் கொள்கைக்கு எதிரான கருத்துகளை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சனாதன தர்மம் மற்றும் ரிஷிகள் முனிவர்களை அவர் புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, இன்று கடுமையான விமர்ச்சித்துள்ளது. அரசியல் சாசனத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய ஆளுநர், மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தி கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.


இந்நிலையில், இன்றிரவு டெல்லி செல்ல இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அவரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தாங்கள் நிறுத்தும் வேட்பாளரை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.கவின் தலைமை உள்ளது. அதேநேரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த நாடு முழுவதும் உள்ள மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


மேலும் படிக்க | சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்!


இதனை  உன்னிப்பாக கவனித்து வரும் பா.ஜ.க மேலிடம், வியூகங்களை அதற்கேற்ப வகுக்கத் தொடங்கியுள்ளது. இதனையொட்டியே ஆளுநர் பயணமும் இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இந்த பயணத்தின்போது சந்தித்து பேசும் ஆளுநர் ஆர்.என் ரவியிடம், குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை தமிழக அரசுடனான மோதல் போக்கை கைவிடும்படி மத்திய அரசு அறிவுறுத்தவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நிலுவையில் இருக்கும் ஒரு சில கோப்புகளுக்கு கையெழுத்திடுவது பற்றி ஆலோசிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR