உலக கோப்பை வடிவில் ஆளுயர கேக்... பிரபல பேக்கரி நிறுவனம் அசத்தல்!
இராமநாதபுரத்தில் கால்பந்து ரசிகர்களைக்கவரும் வகையில் உலக கோப்பை வடிவில் ஆளுயர கேக் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து பிரபல பேக்கரி நிறுவனம் அசத்தல்.
உலக கோப்பைக் கால்பந்துப் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் ஆளுயர உலக கோப்பைக்கேக் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உலக கோப்பைக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா பேக்கரிஸ் நிறுவனம் சார்பாக உலக்கோப்பைக் கால்பந்து போட்டியை கொண்டாடும் விதத்திலும், இன்றைய இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் விதத்திலும், கால்பந்து உலக கோப்பையை ஆளுயர கேக்காக வடிவமைத்து, ராமநாதபுரம் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரி முன்பு வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இதை வாடிக்கையாளர்களும், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் இதனை ரசித்து செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் அங்கு நின்று செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.
மேலும் படிக்க | சமூக ஊடகங்களில் பரவும் தேர்வு முடிவுகள் போலி! எச்சரிக்கும் TNPSC
இதுகுறித்து ஐஸ்வர்யா பேக்கரியின் உரிமையாளர் வெங்கடசுப்பு கூறியதாவது, உலக கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டும் வகையிலும், உலக கோப்பை வடிவிலான ஆளுயர கேக் செய்து பேக்கரி முன்பு வைத்துள்ளோம். இந்த கேக் 60 கிலோ சக்கரை, 240 முட்டையுடன் 85 கிலோ எடையில் ஐந்தரை அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேக்கை நான்கு மாஸ்டர்கள் இணைந்து 4 நாட்களாக வடிவமைத்துள்ளனர். இது ரசிகர்கள், வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.
மேலும் படிக்க | குறைகிறது சுங்கச்சாவடி கட்டணம் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
மேலும் படிக்க | அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம்! வைகோ அறிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ