காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வந்ததால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் தங்களுடைய கடுமையான கண்டன கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | இலங்கை மக்களுக்கு உதவ நிதி தாருங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


மேலும், இது குறித்து அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அவரது சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-


விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களிடம் (Night custody) எனப்படும் இரவு விசாரணை  நடத்தக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலை 6-மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


சென்னையிலும், திருவண்ணாமலையிலும் விசாரணை கைதி மரணம் அடைந்த விவகாரத்தை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க | அடுத்தடுத்து நடக்கும் மறுவாழ்வு மைய மரணங்கள்... இயற்கை மரணமா? கொலையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR