குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு... 4ம் நாளாக குளிக்க தடை!
குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இன்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று காலையிலும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் அனைத்து அருவிகளிலும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவதை நிறுத்தி உள்ளனர் . இதனால் குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் படிக்க | கனமழை எச்சரிக்கை! அனைத்து பள்ளிகள் - கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கபட்டிருந்த நிலையில், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் சில நேரங்களில் விட்டு விட்டு கனமழை, சாரல் மழை என நீடிக்கிறது மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது கோதையாறு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தண்ணீர் திறப்பதாலும் மழை காரணமாக ஏற்படும் காட்டாற்று
வெள்ளம் காரணமாகவும் குற்றியாறு மோதிரமலை தரைப்பாலம் அவ்வப்போது மூழ்கி வருவதால் இந்த பகுதிகளை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியின மக்கள் மற்றும் ரப்பர்தோட்ட தொழிலாளர்கள் மின்வாரிய ஊழியர்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
பேருந்து உட்பட வாகனங்கள் தண்ணீர் குறைவதற்காக பாலத்தின் இருபுறமும் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது கடந்த டிசம்பர் மாத மழை காலத்தில் இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க ஐந்து கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இது வரை இது சம்பந்தமான பணிகள் நடைபெறாத காரணத்தால் இந்த பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ