கடன் சுமையால் மனைவி, மகன்களை கொன்று வங்கி ஊழியர் தற்கொலை
சென்னை பெருங்குடியில் கடன் சுமையால் தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியும், மகன்களை கழுத்தை நெருக்கி கொன்றும் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை பெருங்குடியில் கடன் சுமையால் தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியும், மகன்களை கழுத்தை நெருக்கி கொன்றும் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்டவர் மணிகண்டன் (36), தனது மனைவி தாரா (35), மூத்த மகன் தரன் (10), இளைய மகன் தாஹன் (1) ஆகியோருடன் சென்னை பெருங்குடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு பன்னாட்டு வங்கியான பார்க்லேஸ் வங்கியின் சென்னை கிளையில் ஊழியராக பணியாற்றி வந்த மணிகண்டன் வருடத்திற்கு 28 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் வேலையிழந்த மணிகண்டன், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
ALSO READ | புத்தாண்டை முன்னிட்டு இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு
அதனை தொடர்ந்து மணிகண்டன் தனது நண்பர்களிடம் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கடன் வாங்கியுள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று இரவும் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த மணிகண்டன், மனைவி தாராவை கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலியே தாரா உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து தனது இரு மகன்களையும் துணியை கொண்டு கழுத்தை நெருக்கி கொன்று தானும் சமயலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று காலை வரை வீட்டின் கதவு திறக்கப்படாத காரணத்தினால், அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திர்க்கு விரைந்த துரைப்பாக்கம் போலீசார், இறந்த நான்கு பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக, மணிகண்டனின் தொலைபேசி, டைரி ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ALSO READ | ஜனவரி 5-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR