திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் குளிக்க தடை... காரணம் இது தான்..!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஜெல்லி மீன்கள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. கடலில் நீராடும் பக்தர்களை கடிப்பதாலோ அல்லது தொடுவதாலோ அலர்ஜி ஏற்பட்டு ஊறல் ஏற்படுகிறது. சில பக்தர்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்
இந்நிலையில், கடற்கரை பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் கோவில் கடற்கரையில் ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் கூறும்போது, இந்த வகை ஜெல்லி மீன்களால் பக்தர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கோயில் கடலில் ஜெல்லி மீன்கள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் பக்தர்கள் கால்களை மட்டும் நனைத்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டம் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயம் ஆகும். இது முருகனின் ஆறு படை வீடுகளில், இரண்டாம் படை வீடாக திகழ்கின்றது. இக்கோயில் பழந் தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகின்றது. அதனால், இக்கோயில் அமைந்துள்ள இடம் பிற ஐந்து மலைக்கோயிலாக அமைந்துள்ளது.
திருச்செந்தூர் கோயிலின் கோபுரம் 157 அடி உயரம் கொண்டது மற்றும் ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டு அவனுக்கு வெற்றி பெற்று ஆட்கொண்டதால், இவர் "செயந்திநாதர்" என அழைக்கப்பெற்றார். இக்கோயிலில் முருகப்பெருமான் தன் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.
மேலும் படிக்க | திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு - பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ