BCA பட்டமானது B.Sc கணிதத்திற்கு சமமானது அல்ல என தமிழக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் அரசு வேலைக்கான, குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளின் தகுதி தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டமானது, பிஎஸ்சி கணிதத்திற்கு சமமானது அல்ல என்பதால் அதற்கு இணையான வேலைவாய்ப்பை கோரமுடியாது.


அதேபோல் பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்கும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டங்கள்  எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல என்பதால் எம்எஸ்சி விலங்கியல் பட்டத்துக்கான வேலைவாய்ப்பை எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம்பெற்றவர்கள்  கோர முடியாது.


இதுபோல் 50-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை, சமமான படிப்புகளாகக் கொண்டு அரசு வேலைக்கு கோரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஏற்கெனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் இணையானவை இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.