பி.இ. படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையின் இந்த கல்வியாண்டுக்கான (2018-19) தரவரிசை பட்டியலை, இன்று  அண்ணா பல்கலைக்கழகத்தின் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில்,பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 1,59, 631 பேரில் 1,04, 453 பேருக்கு தரவரிசை பட்டியலில் 1,76,875 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.மற்றும் இந்த தரவரிசைப்பட்டியலில் முதல் 10 பேர் 200க்கு 200-மதிப்பெண் பெற்றுள்ளனர். மற்ற 5,397 மாணவர்களின் விண்ணப்பங்கள் தேர்வாகவில்லை. அதில், கீர்த்தனா ரவி முதலிடத்தை பெற்றார். ரித்வீக், ஸ்ரீ வர்ஷினி ஆகியோர் முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தை பெற்றுள்ளனர். 


மேலும், மேளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் ஏதேனும்தவறு இருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது.