பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: பி.இ. படித்தவர்களும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டெட் தேர்வு எழுதி பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியாற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பி.இ. படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி அரசாணை வெளியிட்டு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.


தமிழக பள்ளிகளில் ஆசிரயர் பணி புரிவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teachers Eligiblity Test –TET) தேர்ச்சிப் பெற்றிருப்பது கட்டாயம். பி.எட் ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, ஆசிரியராக பணி நியமனம் பெற்று வருகின்றனர். முன்னதாக பி.எட் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள், இன்ஜினியிரிங் முடித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. 4 ஆண்டுகள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.எட் படிப்பை தொடருவதற்கு மாணவர்களிடையே ஆர்வம் இல்லாததே இதற்கு காரணம் என குறப்படுகிறது. 


இந்நிலையில், தற்போது இன்ஜினியரிங் படிப்புக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் பி.இ இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்களும் டெட் தேர்வு எழுதி, ஆசிரியர் பணியில் சேரலாம். அவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் கணிதம் பாடம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.