கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சபரி(35). இவரது உறவினர்கள் கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்து வரும் நிலையில் உறவினரின் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி கடந்த 9ம் தேதி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனை தொடர்ந்து நேற்று சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சிறுமி அதனை மறுத்திடவே தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். மேலும் அருகில் இருந்த சிறுமியின் உறவினர்களிடம் சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.


ALSO READ | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; காவல்துறை தீவிர விசாரணை!


இதனால் சபரிக்கும் சிறுமியின் உறவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுத்துள்ளது. இதனிடையே சிறுமி தனது உறவினர்களிடம் சபரி பாலியல் தொல்லை அளித்ததை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சபரியை தர்ம அடி அடித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


இதையடுத்து சிறுமியின் தாயார் புகாரின் பேரில் சபரியின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சபரியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR