ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி - கான்சாபுரம் விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதி. நாள்தோறும் இந்த சாலையில் சுமார் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் புதுப்பட்டி கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் இருந்து மூலக்காடு செல்லும் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம்படும் படியாக நின்று கொண்டிருந்த நிலையில், அவர்கள் அருகில் பை இருப்பது தெரியவந்தது.
வனத் துறையினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது சாலையோரத்தில் உள்ள ஓடை பகுதியில் முட்புதருக்குள் இரு பைகளில் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
உடனடியாக அந்த சாலையை யாரும் பயன்படுத்தாமல் இருக்க காவல் துறை மூலம் கயிறுகள் கட்டப்பட்டது. மேலும் வெப்பம் காரணமாக வெடிகுண்டுகள் எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து விடும் என்ற காரணத்தினால் உடனடியாக பள்ளம் தோண்டப்பட்டு அதனுள் வைக்கபட்டது.
தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புஷ்பராஜ், ராம்குமார், சின்னச்சாமி ஆகிய 3 பேரை பிடித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அதிகம் பயணிக்கும் இந்த சாலையில் கிடைக்கப் பெற்ற நாட்டு வெடிகுண்டுகளால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.
ALSO READ | கோவையில் 21ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR