கழக பொதுச்செயளாலர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்தும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் பேரையூரில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை ஒன்றிய கழகச் செயளாலர் ராமசாமி செய்து இருந்தார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தவசி, மாணிக்கம், கருப்பையா, எஸ் எஸ் சரவணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஜான்மகேந்திரன், புளியங்குளம் ராமகிருஷ்ணன், டாக்டர் விஜயபாண்டியன், மாணிக்கம், மாவட்ட கழக நிர்வாகிகள் சி முருகன், வக்கீல் தமிழ் செல்வன், வக்கீல் திருப்பதி, உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. கனமழை வெளுத்து வாங்கப்போகுது - உஷார் மக்களே!


இந்த கூட்டத்தில் ஆர் பி உதயகுமார் பேசியதாவது, இன்றைக்கு தமிழக அரசியலில் பிறப்பால் அங்கீகாரமா? உழைப்பால் அங்கீகாரமா என்று விவாதம் நடந்து கொண்டு வருகிறது. இன்றைக்கு பிறப்பால் அங்கீகாரத்தை அடைந்து சமூக நீதி, சமதர்மம் ஆகியவை கேலிக்கூத்தாகி இன்றைக்கு கற்கால ஆட்சியாக, மன்னர் ஆட்சியாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி நான் நடிகன் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறினார், இன்றைக்கு துணை முதலமைச்சர் ஆகியுள்ளார். அதேபோல கருணாநிதி, வாரிசு அரசியலில் ஊக்குவிக்க திமுக சங்கர மடமல்ல என்று கூறினார். ஆனால் இன்றைக்கு திமுக கம்பெனி ஆகிவிட்டு விட்டது.  தாத்தா, மகன், பேரன், கொள்ளுபேரன் என்ற பதவிக்கு வருகிறார்கள். அதனால் பொது வாழ்வில் உழைத்தால் என்ன பலன் என்று திமுக தொண்டர்கள் இன்றைக்கு நம்பிக்கை இழந்து விட்டனர். 


தற்பொழுது மதுரைக்கு உதயநிதி வந்த போது ஒரு மணி நேரம் போக்குவரத்தை நிறுத்திவிட்டனர், முதலமைச்சருக்கு கூட இதுபோன்று கிடையாது அப்படி என்றால் மக்களை காக்க வைக்க காவல்துறைக்கு யார் உத்தரவிட்டது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் உதயநிதி திமுகவிற்கு வெற்றியை பெற்று தந்துள்ளார் அதனால் தான் அந்த பதவி என்று கூறிவிட்டு இன்றைக்கு ஸ்டாலினை ஜோக்கர் நிலைக்கு பரிதாபமாக தள்ளி விட்டனர். முதலமைச்சர் பதவிக்கு தான் சில மரபுகள் உண்டு ஆனால் அதே மரபை தனது பெற்ற மகனுக்கு வழங்கி விதிமுறையை முதலமைச்சர் மீறி வருகிறார் ,அதேபோல் அமைச்சர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உதயநிதியை வைத்துவிட்டு இரண்டாவது இடத்தில் துரைமுருகன் உட்கார வைத்துள்ளார்கள். பதவி உயர்நிதிக்கு, இடம் துரைமுருகனுக்கா, இன்றைக்கு மூன்றாவது இடத்தில் உள்ளவர் நாளைக்கு முதலிடத்தில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.


இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வந்துவிட்டார், அதனால் டெல்லியில் இருந்து உடனடியாக பள்ளி கல்விக்கு நிதி விடுவித்தார்களா? கச்சத்தீவு, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்தார்களா? ஜிஎஸ்டி  தொகை தந்துவிட்டார்களா? நீட் தேர்வை ரத்து செய்துவிட்டார்களா? வெள்ள நிவாரண நிதி வழங்கி விட்டார்களா? இன்றைக்கு தனது மகனை துணை முதலமைச்சராகவும், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க தான் முதலமைச்சர் டெல்லி ஆசி வாங்க சென்றார்.  தற்பொழுது செந்தில் பாலாஜி நிபந்தனையை மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது இன்றைக்கு செந்தில் பாலாஜியை தியாகி போல முதலமைச்சர் பாராட்டுகிறார் அப்படி என்றால், அவர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.


 இன்றைக்கு குடும்ப வாரிசு அரசியலால் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது, இதே குடும்ப வாரிசு அரசியலை எதிர்த்த புரட்சித் தலைவரை கட்சியை விட்டு நீக்கினார் அதனை தொடர்ந்து 12 வருடம் வனவாசத்தை கருணாநிதி அனுபவித்தார். அதனை தொடர்ந்து வைகோ, ஸ்டாலினுக்கும் பிரச்சனை ஏற்பட்டது அதனை தொடர்ந்து வைகோ பிரிந்து சென்றார் தற்பொழுது சரணாகதி அடைந்து விட்டார், ஆனால் இன்றைக்கு திமுக எதிர்க்கும் ஒரே சக்தியாக எடப்பாடியார் உள்ளார். அதேபோன்று தமிழக விளையாட்டு துறையை உலகமே பாராட்டுகிறது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து புளூகு மூட்டையை முதலமைச்சர் கூறி வருகிறார்  இப்போது நடைபெறும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டு வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அம்மா அரசு அமையும் என கூறினார்.


மேலும் படிக்க |  ஐசியூ பிரிவில் நடிகர் ரஜினிகாந்த்! மருத்துவமனை அறிக்கை வருவதில் தாமதம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ