தமிழகத்தில் காலியாக உள்ள 8,826 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெறுகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வை சுமார் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில் நடக்கும் இந்தத் தேர்வில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, 2 ஆம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்ததால் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரமாக உள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு 11.20 வரை மட்டுமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் தேர்வாகும் நபகளுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். எழுத்துத்தேர்வில் 80 மதிப்பெண்களும், உடல்தகுதித் தேர்வில் 15 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதலாக என்.சி.சி, விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்கள் அடிப்படையில் 5 மதிப்பெண் வழங்கப்படுகிறது.