சென்னை: கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்புக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் இயல்பானது. ஆனால் கொரோனாவின் அச்சம் இன்னும் முடிவடைந்துவிட வில்லை என்ற நிலையில், அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே பொது இடங்களில் மக்கள் செல்வதும், வியாபார நிறுவனங்கள், சந்தைகள் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா மூன்றாம் அலை வரும் என்ற முன்னெச்சரிக்கைகளுக்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டன. தேவைப்பட்டால் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அறிவுத்தல்கள் கடைபிடிக்கப்படுவது அவரவர் சொந்த நலனுக்காகத் தான் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளவேண்டும்.


ஆனால் பல இடங்களில் மக்கள் பெரும்திரளாக கூடுவதால் கொரொனா பரவும் அபாயம் அதிகரித்திருப்பதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 



அதையடுத்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை மக்கள் அதிகம் கூடும் நகரத்தின் 7 மார்க்கெட் பகுதிகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களை அடையாளம் கண்டு, சமீபத்திய கோவிட் -19 அதிகரிப்படை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நகரத்தின் ஒன்பது சந்தைப் பகுதிகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


டி நகர், பாரிஸ் கார்னர், புரசைவாக்கம், அமாஞ்சிக்கரி, திருவல்லிக்கேணி, ரெட் ஹில்ஸ், திரு வி க நகர், ராயபுரம் ஆகிய சந்தைப் பகுதிகள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 வரை மூடப்படும் இந்த இடங்களில் வணிக வாளங்கள் மற்றும் அங்காடிகள் இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை செயல்பட அனுமதி இல்லை. கொத்தவால் சாவடி மார்க்கெட் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுடனான சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


Also Read | Tamil Nadu Police: இனி காவல்துறையினருக்கும் வார விடுமுறை; நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது


கடந்த ஐந்து நாட்களில், தமிழகம் முழுவதும் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 31) தமிழகத்தில், 1947 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில், சென்னையில் மட்டும் 215 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கோயம்புத்தூரில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம். அங்கு 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை முடிவு செய்யும்படி கேட்டிருந்தார். கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் மக்கள் அதிக அளவில் கூடுவது தொடர்பாகவும் அவர் கவலை தெரிவித்திருந்தார். இதற்கிடையில், தமிழக அரசு ஆகஸ்ட் 9 வரை மாநிலம் தழுவிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.


பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், மக்கள் கோவிட் -19 வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதால், இனி புதிதாக எந்தவித தளர்வுகளும் அறிவிக்கப்படமாட்டாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, முடிவு செய்யப்பட்டுள்ளது.


Also Read | COVID-19 Update July 30: 1,947 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 27 பேர் உயிரிழப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR