சென்னை:தமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு இனிமேல் உண்டு என டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
நீண்டநாட்களாக காவல்துறையினர் மத்தியில் இருந்து வந்த வார விடுப்பு என்ற கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, புதிய டிஜிபியாக, சைலேந்திர பாபு பதவியேற்றுக் கொண்டார். அவர் காவல்துறையினருக்கும் வாராந்திர விடுப்பு மற்றும் பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்கும் விடுப்பு அறிவித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
காவல்துறையினர் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ள ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு வார விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை, கொரோனா நெருக்கடி வந்த பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. வைரஸ் தொற்று பரவலுக்கு பின்பு காவல்துறையினரின் பணிச்சுமை பல மடங்கு கூடியிருக்கிறது. மாதக்கணக்கில் விடுப்பில்லாமல் பணியாற்றும் சூழலில் அவர்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து டிஜிபி சைலேந்திர பாபு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Also Read | "பணப்பலனும் இல்லை; பதவி உயர்வும் இல்லை" : அங்கலாய்க்கும் அரசு ஊழியர்கள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில். காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் கொள்ள ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவல்துறையினருக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருப்பவர்களுக்கும் மிகை நேர ஊதியம் (Overtime pay) வழங்கப்படல் வேண்டும்.
காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை குடும்பத்தாருடன் கொண்டாட விடுமுறை வழங்கப்பட வேண்டும், அதோடு, தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று டிஜிபியின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தையும் மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் செயல்படுத்த வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
Also Read | தமிழகத்தின் புதிய DGP ஆக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR