தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். இவர் சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் அதிகளவில் காணலாம். இவர் பட்டிமன்ற பேச்சால் உலகளவில் உள்ள தமிழர்கள் மித்தியில் மிகவும் புகழ்பெற்றவர். கெமிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்திருக்கும் இவர் தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்டிமன்றத்தில் இவருக்கும், பேச்சாளர் ராஜாவுக்கும் நடக்கும் விவாதங்கள் மிகுவும் பிரபமானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாரதி பாஸ்கரின் (Bharathi Baskar) பேச்சை ரசித்துகேட்பார்கள். மெல்லிய நகைச்சுவை மற்றும் அற்புதமான கருத்துக்களைக் கொண்டிருக்கும் இவரது ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இருவரின் பேச்சுக்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்கள் கரவொலி எழுப்பி ரசிப்பர். கடந்த சில நாட்களுக்கு முன், சாலமன் பாப்பையா, ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்தனர்.


ALSO READ | வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: முக்கிய அம்சங்கள் இதோ


இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ALSO READ | Tamil Nadu: பாஜக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR