Chennai Latest News: கீழ்ப்பாக்கம்‌ சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர்‌ எடுத்துச்‌ செல்லும்‌ பிரதான உந்து குழாயில்‌ இணைப்பு பணிகள்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தால்‌ (CMRL), நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்‌ சாலையில்‌ மேற்கொள்ளப்படுவதால்‌ ஆக. 31ஆம் தேதி (நாளை) மாலை 07.00 மணி முதல்‌ செப். 1ஆம் தேதி (நாளை மறுதினம்) அன்று பிற்பகல்‌ 03.00 மணி வரை தேனாம்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தப்படுவதாக சென்னை குடிநர்‌ வாரியம்‌ தகவல் தெரிவித்துள்ளது.‌


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கீழ்ப்பாக்கம்‌ குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர்‌ எடுத்துச்‌ செல்லும்‌ 750 மி.மீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன்‌ 750 மி.மீ.,
விட்டமுள்ள பிரதான உந்து குழாயை இணைக்கும்‌ பணிகள்‌ சென்னை மெட்ரோ ரயில்‌ நிறுவனத்தால்‌ (CMRL) ஸ்டெர்லிங்‌ சாலையில்‌ மேற்கொள்ளப்படுகிறது. 


மேலும் படிக்க | எல்பிஜி விலை தள்ளுபடி... ரூ. 200 இல்லை ரூ. 400 - சென்னையில் இப்போ எவ்வளவு தெரியுமா?


எந்தெந்த பகுதிகளுக்கு குடிநீர் வராது?


இதனால், நாளை (ஆக. 31ஆம் தேதி) மாலை 7 மணி முதல்‌ நாளை மறுதினம் (செப். 1) பிற்பகல் 3 மணி வரை மண்டலம்‌-9 (தேனாம்பேட்டை) உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்‌ செய்யப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்திகுறிப்பு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் இணை இயக்குநர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.‌


மண்டலம்-9‌ பகுதிகளான நுங்கம்பாக்கம்‌, ஆயிரம்‌ விளக்கு, தியாகராய நகர்‌, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, இராயப்பேட்டை என சென்னை பெருநகரின் முக்கிய அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் குடிநீர் வராது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள்‌, நிறுவனங்கள், முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது‌.


அவசரத் தேவைக்கு என்ன செய்ய வேண்டும்?


மேலும், அவசரத்‌ தேவைகளுக்கு லாரிகள்‌ மூலம்‌ (Dial For Water) குடிநீர்‌ பெற்றுக்கொள்ள வாரியத்தின்‌ https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்‌. மேலும்‌, குடிநீர்‌ இணைப்பு இல்லாத பகுதிகள்‌ மற்றும்‌ அழுத்தம்‌ குறைவான பகுதிகளுக்கு குடிநீர்‌ தொட்டிகள்‌ மற்றும்‌ தெரு நடைகளுக்கு லாரிகள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ குடிநீர்‌ விநியோகம்‌ எந்தவித தடையுமின்றி வழக்கம்போல்‌ சீரான முறையில்‌ மேற்கொள்ளப்படும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | முதல்வர் பொய் பேசுகிறார்... 24 மணிநேரத்தில் வெள்ளை அறிக்கை வரும் - அண்ணாமலை அட்டாக்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ