Premalatha Vijayakanth DMDK: தேமுதிகவின் பொதுச்செயலாளராக விஜயகாந்த் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போது பிரேமலதாவை பொதுச்செயலாளராக நியமித்து அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்கு அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்வை அடுத்து பேசிய பிரேமலாத விஜயகாந்த்,"கேப்டன் (விஜயகாந்த்) பார்த்துதான் எனக்கு பொருளாளர் பதவியைக் கொடுத்தார். இன்று மிகப்பெரிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தலைவரின் லட்சியத்தை அடைய என்னுடன் உழைக்க நீங்கள் தயாரா?. உங்கள் பொதுச்செயலாளராக  பணிகளை மேற்கொள்வேன்" என்றார். 


மேலும், பிரேமலதா தேமுதிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் அவர் விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார். தேமுதிகவின் நிறுவனத் தலைவராக மட்டுமே இனி விஜயகாந்த் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்ததில் இருந்து தேமுதிகவின் நிறுவனத் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் விஜயகாந்த் செயலபட்டு வந்தார். 2005ஆம் ஆண்டில் கட்சியை தொடங்கிய விஜயகாந்த் 18 ஆண்டாக தேமுதிகவின் பொதுச்செயலாளராக இருந்துள்ளார். 


மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு


விஜயகாந்திற்கு சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 20 நாள்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் டிச. 11ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். வீடு திரும்பிய மூன்று நாள்களில் தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


இனி விஜயகாந்த் உடல்நிலையை கருதில்கொண்டு தீவிர அரசியல் ஈடுபடும் வாய்ப்பு குறைவு என்பதால் பிரேமலதாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வரும் மக்களவை தேர்தலில் தேமுதிகவின் அரசியல் வியூகம் எப்படி அமையப்போகிறது என்பதை காண கடும் எதிர்பார்ப்பு உள்ளது.


கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் தேமுதிகவின் அரசியல் வளர்ச்சியும், வாக்கு சதவீதமும் கணிசமாக குறைந்துள்ளது. இதனை 2014 மக்களவை தேர்தல், 2016 சட்டப்பேரவை தேர்தல், 2019 மக்களவை தேர்தல் என விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்தபோதே தேமுதிகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது எனலாம். 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது விஜயகாந்த் பெரியளவில் களத்தில் இல்லாத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தது. 


தொடர்ந்து, அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த பின்னர் தேமுதிக யார் பக்கம் நிற்கப்போகிறது என்பது பலரின் கேள்வியாக உள்ள நிலையில், இப்போது விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது. இதில், பிரேமலதாவுக்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியின் உள்ளே எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிரேமலதா தற்போது பொருளாளர், பொதுச்செயலாளராக தொடர்கிறார். பொருளாளர் பொறுப்பு விஜயகாந்தின் மூத்த மகனுக்கு கொடுக்கப்படலாம் என தெரிகிறது. 


மேலும் படிக்க | எண்ணூர் எண்ணெய் கழிவுகள்; தமிழக அரசு விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ