Chennai Relief Funds: சென்னை எண்ணூர் முதல் பழவேற்காடு வரை கடலில் எண்ணெய் கழிவுகள் படலம் போல் படர்ந்துள்ளது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் முதல் சுற்றுச்சுழல் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது புழல் ஏரியில் இருந்து நீர் திறந்துவிட்டபோது, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் சில வெள்ளத்துடன் எண்ணெய் கழிவுகளை வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் (Chennai Ennore Oil Spill) பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டி சென்னை எண்ணூர் தாழங்குப்பம் சந்திப்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் திருவொற்றியூர் மண்டல புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 


அப்போது, பேசிய கந்தசாமி ஐஏஎஸ்,"மழை மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது, அதைத் தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கழிவால், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா 12 ஆயிரத்து 500 ரூபாயும் படகுகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் என நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.


முன்னதாக, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக புழல் ஏரி திறக்கப்பட்டு செங்குன்றம், காவாங்கரை பொசப்பு, ஆம்முல்லவாயில், S.R.F சந்திப்பு, M.F.L சந்திப்பு, சடையாங்குப்பம், சத்தியமூர்த்தி நகர், எர்ணாவூர் வழியாக எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கும்.


சென்னையில் உள்ள பகுதிகளில் மழை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் வழியாக முகத்துவாரத்தில் கலப்பதால் கடற்கரையில் எண்ணெய் படிந்து காணப்பட்டது. இதனால் மீன்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று மீனவர்கள் கூறுகின்றனர் அங்கு உள்ள பாறைகளில் எண்ணெய் படர்ந்து காணப்பட்டது. அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய தாழாங்குப்பம், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளது. 


மேலும் படிக்க | அடுத்த 48 மணிநேரமும் மழை தான்... தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - முழு விவரம்


இதுகுறித்து தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவரின் கணக்கில் வரவு வைக்கப்படும். நிரந்தர வாழ்வாதாரத்தை மீட்கும் வகையிலும் இங்கு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார். 


மேலும், கடலில் மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் அதற்கு மாற்று வாழ்வாதாரம் வேண்டும் எனவும் அரசு பணி வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ரேசன் கடையில் இன்று முதல் ரூ. 6 ஆயிரம்... வாங்க எந்த நேரத்தில் போகலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ