தூத்துக்குடி: கொரொனா (COVID-19) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செப்புப் பிரிவைத் திறக்க ஒப்புதல் கோரி, உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி ஆலோசனை மேற்கொள்ள, இன்று (திங்கள்கிழமை) சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஆளும்கட்சி அழைப்பு விடுத்தது. தற்போது அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் (Edappadi Palaniswami) ஆலோசனை நடத்தினார். இதில், பல காட்சிகள் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை (Sterlite Plant) இயக்க அனுமதிக்கலாம் என தமிழக எதிர்க்கட்சியான திமுக தெரிவித்துள்ளது. அதேபோல ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 


ALSO READ |  ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசை அனுமதிக்க கூடாது: வேதாந்தா நிறுவனம்


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க (Oxygen Produce) திமுக சி.பி.எம், சி.பி.ஐ. பாஜக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 


அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி, அதன் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை திறக்கலாம் எனவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 


இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால், தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆலையை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ALSO READ |  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது: பொதுமக்கள் கோரிக்கை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR