Lok Sabha Election 2024, AIADMK DMDK Alliance: மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது எனலாம். மக்களவை தேர்தல் தேதியும் அட்டவணையும் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல கட்சிகள் தொகுதி பங்கீடு தொடங்கி தேர்தல் பிரச்சாரம் வரை பரபரப்பாக இயங்கி வந்த நிலையில், தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த பரபரப்பு இரு மடங்காக உயர்ந்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல் மார்ச் 27ஆம் தேதி நிறைவடையும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முட்டிமோதும் திமுக - அதிமுக


அந்த வகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவுபெற்றுவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை முழமையாக அறிவித்துவிட்டன. திமுக அதன் 21 வேட்பாளர்களையும், திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொமதேகவின் வேட்பாளரும் அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளின் தலா 2 வேட்பாளர்களும் மதிமுக, ஐயூஎம்எல் கட்சிகளின் தலா ஒரு வேட்பாளரும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டனர். 


மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்... நாடு முழுவதும் உரிமைத்தொகை - திமுக தேர்தல் அறிக்கை


காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் மட்டும் திமுக கூட்டணியில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், அதிமுக தனது கூட்டணி பங்கீட்டை இன்று நிறைவு செய்து முதற்கட்டமாக அக்கட்சி சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களையும் அறிவித்தது. இந்த வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போதே தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 


தேமுதிகவின் 5 தொகுதிகள்...?


தேமுதிகவுக்கு விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. அதிமுக - தேமுதிக இடையிலான தேர்தல் பங்கீடு ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தெரிகிறது. இதன்பின்னர், தேமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.


தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளில் விருதுநகர் மற்றும் கடலூர் காங்கிரஸ் கட்சிக்கும், திருச்சி மதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. குறிப்பாக, மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


விஜயகாந்த் மகன் போட்டியா?


மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரன் விருப்ப மனு பெற்றுள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியி விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் விருப்ப மனு பெற்றுள்ளார். 


புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கான உடன்படிக்கையும் இன்று கையெழுத்தாகலாம். இதில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணாசாமி போட்டியிடுவார் என தெரிகிறது. தென்காசியில் முனைவர் ராணி ஸ்ரீகுமார் என்ற வேட்பாளரை அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | 16 வேட்பாளர்களை அறிவித்த அதிமுக... புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு - இபிஎஸ் பிளான் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ