முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மார்ச் 31 வரை மூட உத்தரவு
தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மார்ச் 31 வரை மூட உத்தரவு.
சென்னை: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் முக்கியமாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி நிலையங்கள் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலோசனை ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்கனவே ஆய்வுக்கூட்டம் இரண்டு முறை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆலோசனை செய்யப்பட்டது. அதில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
குறிப்பாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், ஏற்கவே இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது, அதேபோல தமிழக முதல்வர் விடுமுறை அளித்துள்ளார்.
ஏற்கவே கொடைக்கானலில் வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல ஈரோட்டில் ஜவுளி வாரச் சந்தைகள் மற்றும் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் மாட்டுச் சந்தைக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.