Ponmudi Governor RN Ravi Issue: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவர் எம்எல்ஏ பதவியை இழந்த நிலையில் அமைச்சர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் சமீபத்தில் அவரின் தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது, இந்த வழக்கில் பொன்முடி மட்டுமின்றி அவரின் மனைவி விசாலாட்சிக்கும் தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் இவருக்குமான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது. 


எம்எல்ஏவாக தொடரும் பொன்முடி


பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வதற்கான அனுமதியையும் உச்ச நீதிமன்றம் அளித்தது. இதற்கிடையில், திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, இதனை திருப்பிப் பெற்றுக்கொண்டது, சட்டப்பேரவை அலுவலகம். அதன்மூலம், பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் எனவும் தெரிந்தது. 


மேலும் படிக்க | தேர்தல் பத்திரம்: அதிமுகவுக்கு அதிக நன்கொடை கொடுத்த சிஎஸ்கே... திமுகவுக்கு யார் தெரியுமா?


குறிப்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நேற்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, பாஜகவில் இணைந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 


ஆளுநர் திடீர் டெல்லி பயணம்


தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் திருக்கோவிலூர் தொகுதி இல்லை என்ற நிலையில், பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வதும் உறுதியானது. மறுபுறம் அவர் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. அதையொட்டி, பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். 


முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டார், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்ததால், பதவிப் பிரமாணம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. 


ஆளுநர் கடிதமா?


இந்நிலையில், பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க மறுப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,"உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம்.


ஆனால் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கவில்லை, சார்ஜஸ் அப்படியே இருக்கிறது. ஆகவே பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது" என குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அமையும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால்... எடப்பாடி பழனிசாமி தான் காரணம் - பொங்கும் ஓபிஎஸ் அணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ