தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை (https://eregister.tnega.org) இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று (Corona Spread) பரவலைக் குறைக்க மே 24ஆம் தேதி முதல் அமலில் இருந்த ஊரடங்கில் (Full Lockdown) இன்று முதல் சில தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதனால் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் புரிவோருக்கு இ-பதிவு (E-Registration) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


ALSO READ | இ-பாஸ் மற்றும் இ-பதிவுக்கும் என்ன வித்தியாசம்?


இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இ-பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சுயதொழில் செய்வோர் அதிக அளவில் பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. சுயதொழில் செய்வோர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்து வருவதால் இ-பதிவு இணையதளம் முடங்கியதாக கூறப்பட்டுள்ளது. 


உள்ளே வந்தவர்கள் நீண்ட நேரம் முயற்சித்தும் இ-பதிவு செய்ய முடியாதததால் ஏமாற்றமடைந்தனர். சிறிது நேரத்தில் இணையதளத்தில் உள்ள பிரச்சினை சரிசெய்யப்பட்டு செயல்பாட்டு வந்தது.


ALSO READ | மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR