இந்த 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... மழை நிக்கவே வாய்ப்பில்லை - பாதிப்பு எப்படி இருக்கும்?
TN Rain Updates: விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் இன்று முழுவதும் தொடர் மழை இருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Rain Updates: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், விருதுநகர், மதுரையில் இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
தூத்துக்குடி, தேனி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெதர்மேன் அப்டேட்
தென்மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்து பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் சுமார் 95 செ.மீட்டர் மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தென் மாவட்டங்களின் மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அவரது X பக்கத்தில்,"தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். மற்ற அருகிலுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும். மழை நேற்று போல் அதிகமாக இருக்காது. ஆனால் இப்போதும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை - எங்கு அதிகம்?
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்த வரலாற்று காணாத கனமழையால் தாமிரபரணியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு இன்று நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்ககு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது எனவும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்! பேருந்துகள், ரயில்கள் இன்று இயக்கப்படாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ