தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை - எங்கு அதிகம்?

Heavy Rain In TN South Districts: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி, பாளையாங்கோட்டை பகுதிகளில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 18, 2023, 08:13 AM IST
  • நான்கு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு
  • கன மழை மற்றும் அதி கன மழை பெய்து வருகிறது.
  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்கிறது.
தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை - எங்கு அதிகம்? title=

Heavy Rain In TN South Districts: தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி (TN South Districts) உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்த வரலாற்று காணாத கனமழையால் தாமிரபரணியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

குறிப்பாக, தமிழ்நாடு அரசு இன்று நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை (School Colleges Public Holiday) அளித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்,"குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கன மழை முதல் அதிகன மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று (டிச.18) பொது விடுமுறை என அரசு அறிவித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது. மேலும், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்ககு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பேச்சிப்பாறை அணி நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தூத்துக்குடியை போட்டுத்தாக்கும் கனமழை

பாளையங்கோட்டை, தூத்துக்குடி (Thoothukudi) ஆகிய பகுதிகள் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், பாபநாசம் மற்றும் சேர்வலரில் இருந்து 34 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், உள்ளூர் மழையின் ஓட்டமும் ஆற்றில் இருக்கும். தற்போது 75 சதவீதம் நிரம்பியுள்ள மணிமுத்தாறு அணையின் உபரிநீர் தாமிரபரணியில் கூடுதல் வெள்ளம் வரும்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் (Kayalpattinam) நேற்று காலை 6.30 மணிமுதல் இன்று அதிகாலை 6.30 மணி வரை 932 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம், தூத்துக்குடியில் அதி கன மழை பெய்துள்ளது எனலாம். திருச்செந்தூரில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 1.00 மணி வரையிலான நேரத்தில் 673 மி.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் (மி.மீட்டரில் மழை அளவு) காயல்பட்டினம் - 862, திருச்செந்தூர் - 673, ஸ்ரீவைகுண்டம் - 613, சாத்தான்குளம் - 460, கோவில்பட்டி - 455, ஓட்டப்பிடாரம் - 332, தூத்துக்குடி - 318, கீழஅரசடி - 302 என மழை பதிவாகியுள்ளது. மேலும், இன்று அதிகாலை காலை 4.30 மணி நிலவரமாக திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் நேற்று காலை 8.30 மணி முதல் 600 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

குறிப்பாக, வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் அதிக மழைப்பொழிவை பெற்ற இடம் மாஞ்சோலை மழைதான் (Manjcholai Hills Rain) என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் தென்மாவட்டங்களில் 50 செ.மீட்டர் வரை மழை பெய்யும் எனவும் செவ்வாய்கிழமை (நாளை டிச. 19) வரை அதி கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தார்.

2ஆவது அதிகபட்ச மழை இதுவாகும்

தமிழ்நாடு வெதர்மேன் சமீபத்தில் இட்ட பதிவில்,"தூத்துக்குடி காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ., மழை பெய்துள்ளது. (ஒரே நாளில் பெய்த இந்த மழை, அவர்களின் ஆண்டு மழைப்பதிவை விட அதிகம்). 24 மணி நேரத்தில் (அதாவது ஒரே நாளில்) தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழை என்றால் காக்காச்சியில் (மாஞ்சோலை, திருநெல்வேலி) 965 மி.மீட்டர் 1992இல் பதிவானதுதான். அதன் பிறகு 2வது அதிகபட்ச மழையும் இதுவாகும் (காயல்பட்டினம்)" என்றார்.

மேலும் படிக்க | அகஸ்தியர் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News