Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss Tamil) புரொமோ வெளியானது. இந்த புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் (Kamalhaasan) தனது கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்தார். இதற்கிடையில் விரைவில் தொடங்க உள்ள பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என ஒரு பட்டியல் இணையத்தில் உலா வருகிறது.


ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்


அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றது.


இதற்கிடையில் கமல்ஹாசன் தொகுத்து வழக்க உள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் என்பவர் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியதாவது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.


தற்போது கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கோயில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையற்றதாகும். இந்த நிகழ்ச்சிக்காக பலர் ஒன்று கூடுகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | Bigg Boss Tamil 5: புதிய புரொமோ வீடியோ; போட்டியாளர்கள் விவரம் உள்ளே


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR