Balaji Murugadoss vs Udhayanidhi news : விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அத்துடன் திமுகவினரையும் சகட்டு மேனிக்கு திட்டி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். பாலாஜ முருகதாஸ் அண்மையில் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில் " நசுக்கப்பட்டோம்... பிதுக்கப்பட்டோம் என சொல்பவர்கள் எல்லாம் வாரிசுகளை வைத்து படம் எடுக்கிறார்கள்" என விமர்சித்திருந்தார். அதாவது மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படம் எடுத்ததை மறைமுகமாக தாக்கி பாலாஜி முருகதாஸ் பேசியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கிருஷ்ணகிரி : பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை


இவரின் கருத்தால் கடுப்பான திமுக அனுதாபிகள் எல்லாம் பாலாஜி முருகதாஸை கடுமையாக வசைபாட ஆரம்பித்தனர். இதில் இன்னும் கடுப்பான பாலாஜி முருகதாஸ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலைமச்சர் கருணாநிதி குறித்தெல்லாம் திட்டத் தொடங்கினார். " உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது. இவருடைய தாத்த  வித்அவுட் டிக்கெட்டில் வந்ததற்கு அவரை கைது செய்திருக்க வேண்டும். உதயநிதி சொத்து குறித்து பதில் சொல்லுங்கடா" என வெளிப்படையாகவே பதிவு போட்டார். அதற்கு சிலர் பதிலளிக்க, அடுத்த பதிவில், " என் தாத்தாவும்1950ல் சென்னைக்கு வந்தார். உங்க தாத்தாவும் அப்போது தான் சென்னை வந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பணம் வந்தது? நீங்கள் ஊழல் செய்யவில்லை என நம்ப சொல்கிறீர்களா?. உங்கள் குடும்பமே ஊழல் குடும்பம்" என அடுத்த காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார். 


இதற்கு பதிலடி கொடுத்த திமுகவினர் கைதாவதற்கு ரெடியா இருந்துக்கோங்க என எச்சரிக்கை கொடுக்க, "திமுக தான இங்க  ஆட்சியில இருக்கு. முடிஞ்சா என்ன கைது பண்ண சொல்லங்கடா. அவர்களால முடியாது. ஏன்னா நான் சுத்தமானவன்" என சவால் விட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் டைட்டில் வின்னரான பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அவர், அண்மையில் சினிமாவில் நடிக்க மாட்டேன், யாரிடமும் சென்று எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்க மாட்டேன் என்றெல்லாம் கூறியிருந்தார். திடீரென எக்ஸ் பக்கத்தில் ஆக்டிவான பாலாஜி முருகதாஸ், நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையப்போகிறேன் என கூறிவிட்டு, திமுகவினருடன் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார். 


மேலும் படிக்க | "யானை சின்னம் பயன்படுத்த உரிமை இல்லை” - கொடியை மாற்றுவாரா விஜய்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ