அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை -அமைச்சர் செங்கோட்டையன்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசுப் பள்ளிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, "அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தேவையான கழிப்பிட வசதிகள் விரைவில் செய்து தரப்படும். சட்டப்பேரவையில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிக கல்விக் கட்டண வசூலைத் தடுக்கவும், பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு மேம்பாடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 1,942 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதுவரையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.