கேரளாவில் பறவைக் காய்ச்சல்: 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பை அடுத்து தமிழக கேரளா எல்லையான வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. இறந்த வாத்துகளை ஆய்வு மேற்கொண்டதில் எச்5 என்1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பணம் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் வணிகர்கள் வரவேற்பு


தமிழ்நாடு கேரள எல்லையில் சோதனை


இதையடுத்து, கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கேரளாவில், பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தமிழக கேரள மாநில எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்பட 12 சோதனைச்சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்களை கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து, வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள தடை


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து சுமார் ஒரு கி.மீ. சுற்றளவில் வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | வெள்ளி, திங்கட்கிழமைகளில் தேர்தல் நடத்த கூடாது - தமிழிசை சொன்ன காரணத்தை பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ