ஏடிஎம் இயந்திரத்தில் இப்படியொரு நூதன திருட்டா... 15 வயது சிறுவனின் `பலே திட்டம்`
Bizarre ATM Robbery: ஆவடியில் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் பொதுமக்கள் பணத்தை திருடிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
Bizarre ATM Robbery: ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 60 அடி சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. நேற்ரு இரவு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது பணம் வராமல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வங்கி வாடிக்கையாளர் மைய இலவச எண் மூலம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தின் அருகே சந்தேகிக்கும்படி, நின்றிருந்த சிறுவன் ஒருவன் ஏடிஎம் இயந்திரத்தை சாவியால் திறந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது பணம் எடுக்க வந்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுவனை கையும் களவுமாக பிடித்து ஆவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஷ்வா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என தெரியவந்தது. அதில் அந்த சிறுவனின் வயது 15 எனவும் தெரியவந்தது.
மாலையில் அப்பகுதியில் சுற்றி திரிந்த அந்த சிறுவன், பல்வேறு ஏடிஎம்களில் இதுபோன்ற நூதனத் திட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியில் பிளாஸ்டிக் அட்டை வைத்து அடைத்துள்ளான். இதனால் பொதுமக்கள் எடுக்க வேண்டிய பணம் அந்த ஏடிஎம் மெஷினில் உள்ளேயே விழுந்துவிடும். பொது மக்கள் வந்து சென்ற பின்னர் தன்னிடம் இருந்த சாவியால் ஏடிஎம் இயந்திரத்தை சாவகாசமாக திறந்து இயந்திரத்தின் உள்ளே விழுந்து கிடக்கும் பணத்தை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் படிக்க | திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டிற்கு வந்தது! பழைய முனையம் முடங்கியது!
சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்த 10 ஏடிஎம் கார்டுகள், 5 சாவிகள், செல்போன், சுமார் 1 லட்சம் ரூபாய் வரை ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். எஸ்பிஐ வங்கி உள்ள பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பிளாஸ்டிக் அட்டையை வைத்து சாவியை கொண்டு திறந்து பணம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு முதல் சிறுவனிடம் கிடுக்குபிடி விசாரணை என்பது நடைபெற்றது. மேலும் ஏடிஎம் இயந்திரத்தின் சாவி எப்படி சிறுவனின் கைக்கு வந்தது, வங்கி ஊழியர்கள் மற்றும் ஏடிஎம் பணம் நிரப்பும் ஏஜென்ட்கள் யாரேனும் சிறுவனோடு தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்றது.
மேலும் கடந்த 15 நாட்களாக இந்த சிறுவன் ஆவடி பகுதியில் சுற்றி வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. நேற்று மட்டும் நேற்று இரவு 1 லட்ச ரூபாய் அளவிற்கு சிறுவனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் ஏடிஎம்களில் இதேபோல் நூதன கொள்ளையில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கால்வாய் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு.. இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ