SBI சர்வோத்தம் FD முதலீட்டில்... 7.9% கூட்டு வட்டி கிடைக்கும்... மிஸ் பண்ணாதீங்க..!

SBI Sarvottam FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி  மூத்த குடிமக்களுக்கான பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று எஸ்பிஐ சர்வோத்தம் எஃப்டி முதலீட்டு திட்டம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 10, 2024, 08:44 AM IST
  • நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறந்தா எஃப்டி திட்டம்.
SBI சர்வோத்தம் FD முதலீட்டில்... 7.9% கூட்டு வட்டி கிடைக்கும்... மிஸ் பண்ணாதீங்க..! title=

SBI Sarvottam FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்காக அம்ரித கலசம் மற்றும் சர்வோத்தம் என்ற இரு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இரண்டுமே எஃப்டி என்னும் நிலையான வைப்புத் திட்டங்கள். மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டங்களை எஸ்பிஐ வங்கி செயல்படுத்தி வரும் நிலையில், அதில் ஒன்றான, எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் 7.90 சதவீதம் என்ற அளவில் கூட்டு வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.  

SBI சிறந்த FD திட்டத்திற்கான வட்டி

PPF, NSC மற்றும் தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டங்களை விட SBI இன் சிறந்த திட்டம் அதிக வட்டியை வழங்குகிறது. SBI வங்கி செயல்படுத்தும் திட்டத்தின் மிக முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், இது ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட முதலீட்டிற்கான திட்டம் (Investment Tips) மட்டுமே. அதாவது, குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் நிதியை பெற முடியும். எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில், சாதாரண வாடிக்கையாளர்கள் 2 ஆண்டு டெபாசிட்டுக்கு 7.4 சதவீத வட்டியைப் பெறுகிறார்கள்.அதாவது இந்த வட்டி விகிதம் பொது மக்களுக்கானது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் 7.90 சதவீத வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், ஓராண்டுக்கான முதலீட்டுக்கு, பொது மக்களுக்கு 7.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டியும் கிடைக்கும்.

மேலும் படிக்க | லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!

கூட்டு வட்டியின் பலனைப் பெறும் வாடிக்கையாளர்கள் 

மூத்த குடிமக்களுக்கான சிறந்த 1 ஆண்டு எஃப்டி முதலீட்டு திட்டமான இதில் ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான ஓராண்டு முதலீட்டிற்கான ஆண்டு வருமானம் 7.82 சதவீதம் ஆகும். அதேசமயம், இரண்டு வருட டெபாசிட்டுகளுக்கான ஆண்டு வருமானம் 8.14 சதவீதம். ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான பிக்ஸட் டெபாசிட்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ 1 வருடத்திற்கு 7.77 சதவீதமும், 2 வருடத்திற்கு 7.61 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இத்திட்டத்தில் கூட்டு வட்டியின் பலன் கிடைக்கும்.

பணத்தை முதலீடு செய்வதற்கான வரம்பு

எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில், வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்களுக்கும், பிஎஃப் நிதியில் பணம் வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் திட்டம் சிறந்தது. எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில் இவர்கள் முதலீடு செய்து பலன் பெறலாம். 2 கோடிக்கு மேல் முதலீடு செய்ய விருப்பம் உள்ளது ஆனால் வட்டி 0.05 சதவீதம் குறைவாக உள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தில் ஒருவர் எப்போது பணத்தை முதலீடு செய்யலாம் என்பது குறித்த எந்தத் தகவலும் இணையதளத்தில் இல்லை.

எனினும், எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு முன்னதாக பணத்தை எடுக்க முடியாது. முதிர்வு காலத்திற்கு முன் பணம் எடுத்தால், அபராதம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News