`எல்லாம் மெண்ட்டலாகத்தான் இருங்காங்க` ஆர்எஸ் பாரதியின் சர்ச்சைப் பேச்சு - பாஜகவின் பதிலடி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒருமையில் பேசிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுகூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது 'கவர்னருக்கு சம்பளம் கொடுப்பது நாம். அவர் டீ குடிப்பது முதல் அவர் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை தமிழக அரசின் வரிப்பணம் தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய வரிப்பணத்தில் அமர்ந்திருக்கும் அவர், திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார்,கூட்டம் நடத்துகிறார்.
திராவிடம் என்பதே இல்லை என சொல்கிறார். ஐ.பி.எஸ். படித்துவிட்டு அரசியலுக்கு வருகிறவர்கள் எல்லாம் மெண்ட்டலாகத்தான் இருங்காங்க என ஆளுநர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் என கடுமையாக ஒருமையில் பேசி விமர்சித்திருந்தார். ஆர்.எஸ்.பாரதியின் இத்தகைய பேச்சுக்கு பாஜக-வினரிடையே கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.எஸ்.பாரதியின் இத்தகைய பேச்சுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் கொடுக்கும் வகையில், ஆர்.எஸ் பாரதிக்கு இருக்கக்கூடிய தகுதி அறிவாய வாசலில் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுப்பது தான். ஆர்.எஸ்.பாரதியை போன்ற மூன்று அல்லது நான்கு பேர் பிச்சை எடுப்பதை காலம் காலமாக வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என கடுமையாக சாடியிருந்தார். இதற்கு ஆர் எஸ் பாரதி தரப்பில் ஆம் பிச்சை தான் வாங்குகிறேன் என பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆன்மீக பிரிவு அணி தலைவர் அதிசயம் குமார் ஏற்பாட்டில், சுமார் 30-க்கும் மேற்பட்டோர் 5 அலுமினிய தட்டுகளை ஆர்.எஸ்.பாரதியின் வீட்டுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். ஆர்.எஸ்.பாரதி பிச்சை எடுப்பதற்காக இந்த தட்டுகளை அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | இலங்கையில் 23 தமிழ் மீனவர்கள்... மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
மேலும் படிக்க | லிப்டில் சிக்கிய மா.சுப்பிரமணியன் - ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி
மேலும் படிக்க | போலி ஆவணங்களை சமர்ப்பித்தாரா தனுஷ்? விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ