தமிழகத்தில் பாஜக கை கூட ஊன்ற முடியாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்ததற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில், முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பேசிய மு.க.ஸ்டாலின்., பாஜக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டால், தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.


இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது, தமிழகத்தில் பாஜக கை ஊன்றக்கூட முடியாது.. ஸ்டாலின் கீழே விழுந்தால்தானே கை ஊன்ற? ஆழவிதை ஊன்றி வேர்கள் பரப்பி ஆல்போல் தழைத்து விழுதுகள் பதித்து வளர்வோம் என்று கூறியுள்ளார்.