சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 134 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 2000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சென்னையில் முதல் வெற்றியை பதிவு செய்தது பாஜக.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட உமா ஆனந்தனுக்கு கடும் எதிர்ப்பு இருந்தும் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியயும் பெற்றுள்ளார்.


இன்று தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் வேளையில், அவர் வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார் என செய்திகள் வெளியாகின. அதை கொண்டாடும் வகையில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த வேளையில், அது உண்மை இல்லை, வதந்தி என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக அனைத்து வதந்திகளையும் புறந்தள்ளி சுமார் 2000 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.


134 வது வார்டு வாக்கு நிலவரம்:


காங்கிரஸ் - சுசீலா கோபாலகிருஷ்ணன் -2886
பாஜக - உமா ஆனந்தன் - 4373
அதிமுக - அனுராதா - 2109


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR