`எங்க வீட்டுக்கு நீங்க வருவீங்களா” என்ற சிறுமியின் அழைப்பை ஏற்று அசத்திய அண்ணாமலை
தேர்தல் பிரச்சாரத்தின் போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ஒரு சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்ய, அவர்களது வீட்டில் உணவருந்தி இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்து, அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ஒரு சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்ய, அவர்களது வீட்டில் உணவருந்தி இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்து, அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சி தொகுதியில், வேட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள சேமங்கி, செல்வநகர் அருந்ததியர் காலனியில், பிரச்சாரத்திற்காக சென்ற போது அந்த கிராமத்தில் இருந்த சிறுமி ஒருவர் எங்கள் வீட்டிற்கு எல்லாம் நீங்கள் வருவீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலி, “நான் உங்கள் வீட்டுக்கு கண்டிப்பாக வருகிறேன், ஒரு நாள் தங்கி செல்கிறேன்” என்று உறுதி கூறினார்.
இந்நிலையில் சொன்ன வாக்கை காப்பாற்ற, நேற்று இரவு வேட்டமங்கலம் காலனியில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்று தங்கினார். இரவு உணவை அவர்களுடன் சாப்பிட்டு விட்டு அங்கேயே உறங்கினார். காலை எழுந்த அவர் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் கலந்துரையாடி, மக்களின் குறைகளை கேட்டறிந்தார். சிறுமியின் வீட்டில் அண்ணாமலை தங்கிய நிகழ்வு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களிடம் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது டிவிட்டரில், அவர் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ALSO READ | TN Elections 2021: ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பூவிற்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR