TN Elections 2021: ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பூவிற்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம்

மக்களிடம்  அதிமுக கூட்டணி சாதனையை சொல்லி ஒட்டு கேட்கிறது. திமுக கூட்டணி தங்கள் சாதனையை சொல்லாமல் வெறுப்பை முன் வைத்து தேர்தலை சந்திப்பதால் வெற்றி பெற முடியாது என்றார். 

Last Updated : Apr 3, 2021, 01:26 PM IST
  • ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தால் மட்டும்தான் திமுக இதுவரை அரியணை ஏறியுள்ளது.
  • இந்த தேர்தலில் ஆட்சிக்கு எதிரான மனநிலையே இல்லை.
  • கொரோனா காலத்தில் இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுக்கும் முன்னுதாரணமாக எடப்பாடி பழனிச்சாமி- ஓ பன்னீர் செல்வம் அரசு நடந்துள்ளது.
TN Elections 2021: ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பூவிற்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம் title=

தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக ரசென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா,  ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் திருமதி. குஷ்பு சுந்தரை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். 

ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தால் மட்டும்தான் திமுக இதுவரை அரியணை ஏறியுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சிக்கு எதிரான மனநிலையே இல்லை. கொரோனா காலத்தில் இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுக்கும் முன்னுதாரணமாக எடப்பாடி பழனிச்சாமி - ஓ பன்னீர் செல்வம் அரசு நடந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மக்களிடம்  அதிமுக கூட்டணி சாதனையை சொல்லி ஒட்டு கேட்கிறது. திமுக கூட்டணி தங்கள் சாதனையை சொல்லாமல் வெறுப்பை முன் வைத்து தேர்தலை சந்திப்பதால் வெற்றி பெற முடியாது என்றார். 

அதனால், நாங்கள் தமிழகத்தில் அதிமுக கூட்டணி  நிச்சயம் வெல்லும் என்றார். 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்கொள்ள முடியாத பதட்டத்தில்தான் அவருடைய தாயை பழித்து திமுக பேசியது எனக் கூறிய அவர், ஒரு எளிய விவசாயி மகனாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உச்சபட்ச அதிகாரத்தை அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக பேசியதை  எந்த தமிழ் தாய்மார்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடையும் என அவர் உறுதிபட தெரிவித்தார். 

ALSO READ | Watch: மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக தரிசனம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News