இளம்பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி - பாஜக பிரமுகர்கள் கைது
அன்னூரில் இளம்பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள மசக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது தூரத்து உறவினரான அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (38) என்பவர் அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தனது காதல் குறித்து அப்பெண்ணிடம் கூறியதற்கு விருப்பமிருந்தால் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோரிடம் கேட்டதற்கு திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து ஊர் முழுவதும் சண்முகசுந்தரம், ‘தான் திருமணம் செய்து கொண்டால் அப்பெண்ணைத்தான் திருமணம் செய்வேன்’,இல்லையென்றால் செத்துவிடுவேன் என புலம்பிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அப்பெண் டூவீலரில் சென்று கொண்டிருக்கும் போது சண்முகசுந்தரம் தனது காரில் வந்து வழிமறித்து தனக்கு ஒரு முடிவு சொல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர் மறுக்கவே வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றிய சண்முகசுந்தரம் பொன்னே கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண் அன்னூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார் இளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய முயன்ற சண்முகம் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக கெம்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க | காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் - முதலிரவில் ட்விஸ்ட் வைத்த மணப்பெண் !
போலீசாரின் தீவிர விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என தெரிய வரவே அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இளம்பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி - வீட்டிற்குள் விரோதம் !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR