உலகிற்கே வழிகாட்டும் மொழி தமிழ் மொழி : பாஜக தலைவர் JP Nadda
இன்றைய பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்துள்ள பாஜகவின் தேசிய தலைவர் திட்டக்குடி, திருவையாறு, துறைமுகம் ஆகிய தொகுதிளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
தமிழகம், புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்துள்ள பாஜகவின் தேசிய தலைவர், JP Nadda, திட்டக்குடி, திருவையாறு, துறைமுகம் ஆகிய தொகுதிளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜே.பி.நட்டா (JP Nadda), “ இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே வழிக்காட்டும் மொழி தமிழ் மொழி. இந்தியா உலகிற்கு கொடுத்த கொடை தமிழ் மொழி” என தெரிவித்தார்.
திமுக என்ற கட்சியின் பெயருக்கு விளக்கம் அளித்த ஜேபி. நட்டா, DMK என்ற எழுத்துக்களில், D என்பது Dynasty (குடும்ப அரசியல்), M என்றால் Money (பணம் கொள்ளை) மற்றும் K என்றால் Katta Panchayathu (கட்டப்பஞ்சாயத்து) என்றார்.
திமுக, காங்கிரசின் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் எனக் கூறிய அவர், பாஜக என்பது தனித்துவமான கட்சி என்றும், அதில் குடும்பஅரசியல் கிடையாது என்றார்.
ஊழல் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் தி.மு.க - காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் ஆட்சியில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், திமுக அதனை கண்டும் காணாமல் இருந்தது என குற்றம் சாட்டினார். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததன் பின்னணியில் நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களே இருக்கிறார் என அவர் கூறினார்.
வரும் 27-ந் தேதி (சனிக்கிழமை) மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோவை தெற்கு, துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அதைத் தொடர்ந்து 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியிலும், தமிழகத்தில் உள்ள தாராபுரம் தொகுதியிலும் பிரசாரம் செய்வார்.
ALSO READ | நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என ஸ்டாலினுக்கு சவால் விடும் எடப்பாடி பழனிச்சாமி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR