பெட்ரோல் விலை உயர்வை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி விழுந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆகஸ்ட் மாத்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு காரணம் தெரிவித்து வருகிறது.


தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை கவனிக்காமல் வரும் பொதுத்தேர்தலுக்காக பிராச்சாரம் மோற்கொள்ளுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவரும் நிலையில் பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து சாமானியர் ஒருவர் கேள்வி கேட்க, அவரை பாஜக ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.