தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை குறித்து எடுத்துக் கூறினோம், ஆனால் பாஜக கேட்கவில்லை, அதனால் தான் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறினோம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ , அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திண்ணை பிரச்சாரம்: திமுக மகளிரணிக்கு கனிமொழி புதிய டாஸ்க்


கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில், பாஜக ஒரு பொருட்டே இல்லை,டெல்லிக்கு அவர்கள் (பாஜக) ராஜா என்றாலும் இங்கு கூஜா தான்... அதிமுகவிற்கு தேர்தல் என்பது அல்வா சாப்பிடுகிற மாதிரி.. தேர்தலை கண்டு அதிமுகவிற்கு பயன் கிடையாது. பிறக்கும்போதே தேர்தலை சந்தித்த கட்சி அதிமுக, எம்.ஜூ.ஆர், ஜெயலலிதா இல்லை சாதாரண தொண்டன் தான் கட்சி நடத்துகிறான் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஒரு தொண்டர் இல்லை இரண்டரை கோடி தொண்டர்கள் வழிநடத்தும் கட்சி தான் அதிமுக, முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு என்றார்கள். ஆனால் இதுவரை நீட்டினை ஒழிக்கவில்லை, நீட்டினை ஒழிப்பு என்று கூறியவர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒழிந்து போவர்கள். நீட் ஒழிப்பு என்று கூறி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி உள்ளனர். இதுதான் திராவிட மாடல் அரசு, தகுதி உள்ள குடும்பத் தலைவிக்கு மகளிர் உரிமைத்தொகை என்று திமுக அரசு கூறியுள்ளது.தகுதி உள்ள குடும்பத் தலைவிகள்,  தகுதி இல்லாத குடும்ப தலைவிகள் என்று பிரித்து வைத்துள்ளது தான் திராவிட மாடல் அரசு. கூலித் தொழிலாளர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, தமிழகத்தில் போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.


எடப்பாடி பழனிச்சாமியை சாதாரணமாக  நினைக்கக் கூடாது என்று சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் திமுகவும் பாஜகவும் காணாமல் போய்விடும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்ற விவசாயிகளுக்கு தமிழக அரசு உரியது நிவாரணம் வழங்கவில்லை.கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தமிழகத்திற்கு என எதுவும் செய்யவில்லை, தமிழகத்தில் பாஜக வளரவும் இல்லை,தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஒன்பது முதல்வர்கள் ஆட்சி நடத்துகின்றனர். 


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் உறுப்பினர் தொகுதிக்கு என எதுவும் செய்யவில்லை, தேசிய கட்சியோடு கூட்டணி வேண்டாம் என்ற ஜெயலலிதாவின் வழியே தான் எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்துள்ளார். பாஜகவிடம் நாங்கள் தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை குறித்து எடுத்துக் கூறினோம், ஆனால் பாஜக கேட்கவில்லை,, அதனாலதான் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறினோம் என்றார்.


மேலும் படிக்க | விஜயதரணி விலகல்: காங்கிரஸ் ரியாக்ஷன் - பறிபோகும் எம்எல்ஏ பதவி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ