காங்கிரஸ் கட்சியில் விளவங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி, அக்கட்சியில் இருந்து விலகி இப்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் ஒருவாரமாக முகாமிட்டிருந்த அவர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார். அக்கட்சியில் இணைந்த பிறகு பேசிய அவர், பாஜக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியாக இருப்பதாகவும், பிரதமர் மோடியின் தேவை நாட்டிற்கு அவசியம் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
@VijayadharaniM) February 24, 2024
விஜயதரணி விலகியதன் பின்னணி
காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதரணி விலகியதற்கு முக்கிய காரணம், அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் அதனை கட்சி தலைமை ஏற்றுக் கொள்ளாததால் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கும் விருப்பம் தெரிவித்திருந்த அவர், குறைந்தபட்சம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் என்ற பொறுப்பையாவது கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவாக இருந்தபோதும், மூன்றுமுறை எம்எல்ஏ-வான விஜயதரணிக்கு பதிலாக விடுத்து அக்கட்சியின் எம்எல்ஏ ராஜேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அவர் டெல்லியில் முகாமிட்டு பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ரியாக்ஷன்
விஜயதரணி பாஜகவில் சேரமாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி வந்தார். இருப்பினும் அவர் இப்போது பாஜகவில் சேர்ந்துவிட்டதால் அது குறித்து கருத்து தெரிவித்த செல்வபெருந்தகை, விஜயதாரணி எங்கிருந்தாலும் வாழ்க என கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி அவருக்கு மூன்று முறை எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு பதவிகளை கொடுத்து அழகு பார்த்ததாகவும், அவர் கட்சிக்கு உழைக்காதபோதும் கூட பதவிகளை சோனியா காந்தி கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், விஜயதரணி எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தெரிவித்திருக்கும் செல்வப்பெருந்தகை, விளவங்கோடு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | விபத்தில் சிக்கிய சென்னை மேயர் பிரியா! நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ