கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் பீர் பாட்டில் வீச்சு; இருவர் கைது
கள்ளக்குறிச்சியில் போஸ்டரை கிழித்ததால் எலக்ட்ரிக்கல் கடை மீது பீர் பாட்டில் வீசப்பட்டது. மேலும் அங்கு பா.ஜ.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வ உ சி நகர் 7வது தெரு பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி அன்று இரவு பாஜகவினர் சார்பில் அந்த பகுதியில் உள்ள கடையின் சுவற்றில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஒட்டுவதற்கு முன்னதாக அந்த கடையின் உரிமையாளர் தினேஷ் இந்த பகுதியில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைப் பொருட்படுத்தாமல் பாஜக நிர்வாகிகள் இரவு நேரத்தில் அந்த பகுதியில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
இந்த நிலையில் அந்த போஸ்டரை செப்டம்பர் 17ஆம் தேதி அன்று அந்த கடையின் உரிமையாளர் தினேஷ் அந்த போஸ்டரை கிழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள் அந்த போஸ்டரை கிழித்த நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
மேலும் படிக்க | காய்கறி கடையில் காசு கேட்டு கலாட்டா செய்த காங்கிரஸார்... மூவர் சஸ்பெண்ட்
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் இருதரப்பினரிடையே சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு வந்த கள்ளக்குறிச்சி பாஜக நகர தலைவர் சத்யா மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மனித வள மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் செல்லப்பன் ஆகியோர் காலி பீர் பாட்டிலை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இடத்தை நோக்கி பீர் பாட்டில் வீசி உள்ளனர். இதில் பீர் பாட்டில் நொறுங்கி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் நின்று கொண்டிருக்கும் இடத்தை நோக்கி பீர் பாட்டிலை வீசிய கள்ளக்குறிச்சி பாஜக நகர தலைவர் சத்யா கள்ளக்குறிச்சி மாவட்ட மனித வள மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் செல்லப்பன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் நேரில் விசாரணை மேற்கொண்டார் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | PM Narendra Modi Birthday: பிரதமருக்கும் எண் 8-க்கும் உள்ள சம்பந்தம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ