நீதிமன்ற அவதூறு வழக்கு; மன்னிப்பு கோரினார் H ராஜா!
நீதிமன்றத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் H.ராஜா மன்னிப்பு கோரினார்!
நீதிமன்றத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் H.ராஜா மன்னிப்பு கோரினார்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் H.ராஜா கலந்து கொண்டபோது, குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்க மறுத்த H.ராஜா, காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறையின் தடையையும் மீறி, H.ராஜா தலைமையில் இந்து முன்னணி மற்றும் பாஜக உறுப்பினர்கள், ஊர்வலம் சென்றனர்.
இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, காவல்துறை மற்றும் நீதித்துறை குறித்து H.ராஜா அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் H.ராஜா ஆஜரானார். ஆஜரான அவர் சம்பவநாள் அன்று தான் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து H.ராஜா மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.