வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்டத்தலைவர் வெங்கடேசன் இல்ல திருமணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மணமக்கள் பிரித்தா - சிவனேஷ் குமார் ஆகியோரை நேரில் வாழ்த்து தெரிவித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் அன்புமணி ராமதாஸ் கொணவட்டத்தில் செய்தியாளர்களிடம்  கூறுகையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைபாடு இரண்டு நாட்களில்  நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு எங்களுடைய முடிவை தெரிவிப்போம். நீட் தேர்வு தேவை கிடையாது, சமூக நீதிக்கும் கிராமபுற மாணவர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் எதிரானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கார் ஓட்டி பழகும்போது நடந்த விபரீதம்... இரு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு


நீட் தேர்வை இந்தியாவில் ரத்து செய்ய வேண்டும், குறைந்தது தமிழகத்திலாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். எங்களுடைய நோக்கம் பாமக கூட்டணி சேர்ந்ததற்கு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்துள்ளார். இந்தியாவை மூன்றாவது பொருளாதார நாடாக உலகளவில் எடுத்து செல்வார், மருத்துவர் ராமதாஸ் சொல்வதை போல் இந்தியா சார்ந்த சமூக நீதி பிரச்சணைகளை வலியுறுத்தி தீர்வு காண்போம். காவிரி நீர் பிரச்சணை தீர்க்கபட வேண்டும், அதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதனை தீர்க்க முயற்சி செய்வோம். காவிரி தமிழ்நாட்டின் உயிர் நாடி பிரச்சணை 50 லட்சம் விவசாயிகள் 4 கோடி மக்கள் 22 மாவட்டங்கள் பயனடைகிறது. இரு மாநிலங்களும் சுமூக தீர்வு காண வேண்டும். 


அங்கு காங்கிரஸ் ஆட்சி இங்கு திமுக கூட்டணி ஆட்சி இதற்கு தீர்வு வேண்டும். தமிழக முதல்வர் போதை பொருள் மும்முரமாக ஒழிப்பதாக சொல்வது செயலில் ஒன்றுமில்லை, நான் முதல் சந்திப்பில் முதல்வரிடம் போதை பொருளை ஒழிக்க சொன்னோன். கஞ்சா, அபின் போன்றவைகளை ஒழிக்க மாதம் தோறும் கூட்டம் நடத்தி ஒழிக்க சொன்னோன். ஆனால் கஞ்சா 1.0 , 2.0 என சொல்லி 5 ஆயிரம் பேரை கைது செய்வார்கள். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துவிடுவார்கள். மதுவை விட கஞ்சா போதை பொருள் பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர். இதனை தடுக்க தமிழக முதல்வர் இதில் கவணம் செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் கூறினார்.


மேலும் படிக்க | திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டிற்கு வந்தது! பழைய முனையம் முடங்கியது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ