ஹெச்.ராஜாவின் அநாகரிக பேச்சும் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டும்
அண்ணாமலையின் இந்த கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. அவரது பதிவில், எச். ராஜாவை கண்டித்தோ அல்லது மன்னிப்பு கேட்டோ ஒரு வார்த்தை கூட இல்லை.
சென்னை: சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பொதுவெளியில் Presstitutes என்று பத்திரிக்கையாளர்களை விமர்சித்திருந்தார். அதாவது ஊடகப்பணி செய்பவர்களை பாலியல் தொழில் செய்பவர்களோடு ஒப்பிட்டு பேசினார்.
ஹெச்.ராஜாவின் இந்த செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. மேலும் ஹெச்.ராஜாவின் இத்தகைய அநாகரிக போக்கை கட்சித் தலைமை கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. நல்லவற்றை எடுத்துரைத்து, அல்லவற்றை கண்டித்து, சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ALSO READ | நாகாக்க வேண்டும் ஹெச்.ராஜா - நடவடிக்கை எடுக்குமா பா.ஜ.க!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது. நன்றி… வணக்கம்!" -இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. அவரது பதிவில், எச். ராஜாவை கண்டித்தோ அல்லது மன்னிப்பு கேட்டோ ஒரு வார்த்தை கூட இல்லை. தனது டிவிட்டில், "ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மதிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார். ஆனால் ஜனநாயகத்தின் தூணான ஊடகத்தை பொதுவெளியில் அநாகரிகமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசிய, தங்கள் கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா குறித்து எதுவும் கூறாமல் இருப்பது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
ALSO READ | நீதிமன்ற அவதூறு வழக்கு; மன்னிப்பு கோரினார் H ராஜா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR